415. வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும்
அடப்பாவிகளா, அம்பயர்களும், ரெ·ப்ரியும், நிறவெறி பிடித்த ICCயும் தான் இந்திய அணிக்கு எதிராக உள்ளன என்றால், நம்ம BCCI தேர்வாளர் குழுவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு விட்டது போல இன்று டிராவிட்டும், கங்குலியும், முரளி கார்த்திக்கும், லஷ்மணும், நடைபெறவுள்ள (இந்திய-ஆஸ்திரேலிய-ஸ்ரீலங்கா) முக்கோண ஒரு நாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதுவும், நேற்று பெர்த்தில் மகத்தான வெற்றி பெற்ற இந்திய அணியினரை demoralize செய்யும் விதத்தில், நான்காவது டெஸ்ட் நடைபெறவுள்ள சூழலில் இதைச் செய்திருப்பதைப் போல ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்க முடியாது !!!!
Horses for Courses என்ற வகையில் லஷ்மணும், தற்போதைய form-இன் அடிப்படையில் கங்குலியும் நிச்சயம் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்! வெங்க்சார்க்கருக்கு கங்குலி மேல் என்ன கடுப்போ ? BCCI-இல் கோலோச்சும் "மும்பை மாபியா" எப்போதும் போல தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. மொகீந்தர் அமர்நாத் "Selectors are a bunch of Jokers" என்று கூறியதை இன்னும் இவர்கள் நிரூபித்த வண்ணம் உள்ளனர்!
இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாலும், ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும்போது, அணியில், இளைஞர்களும், அனுபவமிக்கவர்களும் சம அளவில் இருத்தல் அவசியம். ஒரு நாள் பந்தயம் 20-20 விளையாட்டு அல்ல !!! என்னளவில், சாவ்லா, சுரேஷ் ரெய்னா, பிரவீன் குமார் ஆகியோரை காத்திருக்க வைப்பதில் தவறொன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை.
பாவம், தினேஷ் கார்த்திக்குக்கு இருக்கும் அதிர்ஷ்டம் முரளி கார்த்திக்குக்கு இல்லை :( அது போலவே, யுவராஜ் form-இல் இல்லாத நிலையில், டிராவிட், லஷ்மண், கங்குலி என்று (தற்போது சிறப்பாக ஆடி வரும்) அனுபமிக்க மூவரையும் ஒரு சேர நீக்கியிருப்பது தெளிவான கிறுக்குத்தனம் !!! தேர்வாளர்கள் இதற்கு முன்னமே ஒரு மடத்தனம் செய்ததை குறிப்பிட வேண்டும். சகீர் கானுக்கு காயம் ஏற்பட்டபோது அவருக்கு பதிலாக, VRV சிங் என்ற காலணாவுக்கு உபயோகம் இல்லாத ஒரு பந்து வீச்சாளரை ஆஸ்திரேலியாவுக்கு (ஊர் சுற்றிப் பார்க்க!) அனுப்பியது தான் அது !!!
நடக்கவிருக்கும் ஒரு நாள் போட்டித் தொடரில் இந்தியா மோசமாக விளையாடி தோற்கும் பட்சத்தில், இந்த தேர்வாளர்கள் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுவார்களா ???? தேர்வாளர்களுக்கு BCCI சம்பளம் என்று எதுவும் வழங்குவதில்லை என்றாலும், அவர்களின் சுகமான பிரயாணத்திற்கும், வசதியான ஹோட்டல்களில் தங்குவதற்கும், மூக்கு பிடிக்க தின்பதற்கும், குடித்து கும்மாளம் அடிப்பதற்கும், தினப்படிக்கும் BCCI தண்டம் அழுது கொண்டு தான் இருக்கிறது என்பது நிஜம்!!! நமது தேர்வாளர்களே, "Go India Go" என்றில்லாமல், "Go Aussie Go" என்றிருப்பது தான் விந்தையிலும் விந்தை :(
என்று தான், சார்பில்லாத, டெஸ்ட் / ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட, விஷய ஞானமுள்ள மனிதர்கள் தேர்வாளர்களாக நியமிக்கப்படுவார்களோ, புரியவில்லை :(
எ.அ.பாலா
15 மறுமொழிகள்:
Test !
தோனிக்கு 20-20 ல ஜெயிச்ச டீம்தான் வேணுமாம்... அப்டீன்னு சப்பைக்கட்டு வேற...
இது எப்போதும் நடப்பதுதான். நடப்பு தொடர் முடியாத நிலையில், நன்றாக விளையாடுபவர்களை அடுத்த தொடரில் நீக்கிவிடுவார்கள்.
அதுக்கு ஏதாவது ஒரு நொண்டி சாக்கு வேறு சொல்வார்கள்.
ரெண்டு வரி பின்னூட்டம்தான் போடலாமுன்னு நினைச்சேன். நீண்டுக்கிட்டே போகுது. பதிவாவே போடறேன்!! :)
எனக்கு கடுப்பு கடுப்பா வருது! போன தொடரில் தொடர் நாயகன் வாங்கியவரை தூக்குறானுங்க, விளையாடாத ஆளுங்களை உள்ளே கொண்டு வரானுங்க என்னமோ போங்க அதுக்காக மேட்ச் பார்காமல் இருந்துடவா போறோம்!!!
அண்ணே, சொன்னது போல் பதிவைப் போட்டாச்சு. அதையும் கொஞ்சம் படிச்சுடுங்க! :))
அப்படிப் பார்த்து தானே, போட்டு இருக்காங்க. வெங்கசர்க்கார் ஒரு நல்ல விசய ஞானம் உள்ளவர் தானே..
ஆனால், மொத்தமாக தோனியயைக் காட்டிக் கொடுத்ததில், தான் தேர்வாளர்கள் விளையாடிவிட்டார்கள். (தோனி தான் கங்குலியயை வேண்டாம் என்றார் என்று )
இந்த நேரத்தில், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டியிருக்ககூடாது என்பதில் உடன் படுகிறேன்.
///என்று தான், சார்பில்லாத, டெஸ்ட் / ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட, விஷய ஞானமுள்ள மனிதர்கள் தேர்வாளர்களாக நியமிக்கப்படுவார்களோ, புரியவில்லை :(
///
கொத்ஸ் அண்ணா,
நல்ல அலசல் தான் ! நானும் இளைஞர்கள் வேண்டாமுன்னு சொல்லலை ! ஆனா கங்குலி போல சாதிச்ச ஒரு ஆளை, நல்லாவும் ஆடற நேரத்தில விலக்கியிருப்பது அக்கிரமம் :(
எ.அ.பாலா
////தேர்வாளர்களுக்கு BCCI சம்பளம் என்று எதுவும் வழங்குவதில்லை என்றாலும், அவர்களின் சுகமான பிரயாணத்திற்கும்,////
Bala, I think they are paying the selectors also. about 90K Per Month. I recently heard from somewhere. Also the old players they are paying about 35 K as pension.
செந்தழல் ரவி
இன்றோ நாளையோ என்றிருக்கும் முதியவர்களை ஓரம் கட்ட வேண்டியதுதான். ஆனால், அவர்கள் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போதல்ல.
நிறைய பேர் உலகக் கோப்பை தான் கிரிக்கெட்டின் எல்லாமே என்று நினைக்கிறார்கள். கிறுக்கர்கள்!!
அனானி, சின்னப் பையன்,
கருத்துக்கு நன்றி. அவங்க செய்யறது அராஜகம் :(
அடுத்த பதிவு போட்டு இருக்கேன், வாசியுங்க !
***************************
குசும்பன்,
வருகைக்கு நன்றி.
இப்படி சலிச்சுக்கிட்டா எப்படி ? :) நம்ம எதிர்ப்பை தெரிவிக்க வேண்டாமா ?
***************************
TBCD,
கருத்துக்கு நன்றி.
வெங்க்சார்க்கார், ராஜு ஆகிய இருவரும் ஓக்கே ! மத்த மூணு செலக்டர்களும் தேறாத கேசுங்க தானே :(
***************************
செ.ரவி,
தகவலுக்கு நன்றி.
************************
Fast Bowler,
(ஒத்த!)கருத்துக்கு நன்றி. அடுத்த பதிவு போட்டு இருக்கேன், வாசியுங்க !
//
நிறைய பேர் உலகக் கோப்பை தான் கிரிக்கெட்டின் எல்லாமே என்று நினைக்கிறார்கள். கிறுக்கர்கள்!!
//
இது சூப்பர் ;-)
எ.அ.பாலா
//
தோனிக்கு 20-20 ல ஜெயிச்ச டீம்தான் வேணுமாம்... அப்டீன்னு சப்பைக்கட்டு வேற...
//
அதுக்குள்ள அரசியல் பண்ண ஆரம்பிச்சுட்டாரு ...
முதலில் நீங்கள் எல்லாரும் கீழ்க்கண்ட சுட்டியில் இருக்கும் க்ரிக்கெட் மேனேஜ்மெண்ட் பற்றிய உபயோகமான விஷயங்களில் சிலதையாவது படித்து பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்.
cricket management
எனது கருத்துக்கள் இங்கே...
http://blog.nandhaonline.com/?p=41
முகமூடி அண்ணாத்தே,
ஒங்க குசும்புக்கு ஒரு அளவு கிடையாதா ? :)))) நன்னி !
நந்தா,
வருகைக்கு நன்றி.
உங்கள் பதிவை வாசித்து கருத்து சொல்லி விட்டேன் !
எ.அ.பாலா
Post a Comment